அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு

மூலதன மாணியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்குவோருக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது.
Ambedkar Industrial Pioneer Scheme - Minister Marie Wilson
Ambedkar Industrial Pioneer Scheme: ₹165 crore allocation to boost SC/ST entrepreneurs in Tamil Nadu
Published on

தமிழக பட்ஜெட் 2026

2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

இதையடுத்து அவர் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதி ஒதுக்கீடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான ஊக்குவிக்கும் திட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.

மூலதன மாணியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்குவோருக்கு ஆதரவு அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு நோக்கில் முன்னேற்றம் அடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com