மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும்.பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Published on

மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்கள், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம், துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரம், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நகராட்சி மன்ற தலைவருக்கு ரூ.15 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படுகிறது.

பேரூராட்சித் தலைவருக்கு ரூ.10 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com