கவரைப்பேட்டையில் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

கவரப்பேட்டை ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
கவரைப்பேட்டையில் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
Published on

மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

தற்போது டெல்லியில் இருந்து சென்னை வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், மெயின் லைனில் 10 கி.மீ. வேகத்தில் கடந்து சென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com