உப்புமாவுக்கு பதில் பொங்கல் சாம்பார்- காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு

மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது காலை உணவுத்திட்டத்தில் பொங்கல் வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உப்புமாவுக்கு பதில் பொங்கல் சாம்பார்- காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு
Published on

தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது காலை உணவுத்திட்டத்தில் பொங்கல் வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக பள்ளிகளில் சத்துணவு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியத்தொகையை ரூ.61.61 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com