தமிழக அரசு, தனி நபர் பற்றி அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

அரசு மற்றும் தனி நபர்கள் மீது பொய்யான அவதூறுகளும் அருவருக்கத்தக்க ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
TN Government
Published on

தமிழக அரசு மற்றும் அரசின் பிரதிநிதிகள் பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுபோன்று செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் தனி நபர்கள் மீது பொய்யான அவதூறுகளும் அருவருக்கத்தக்க ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே சமூக வலைதளங்களில் அரசு அல்லது தனிநபர் குறித்து ஆபாசமாகவும், கண்ணியத்தை குலைக்கும் வகையிலும், தவறாகவும் பதிவிடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com