சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி

பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.பிரதோஷம் மற்றும் அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
சதுரகிரியில் சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி
Published on

வத்திராயிருப்பு:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வருகிற 28-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை 4 நாட்கள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். மேலும் இரவில் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பிரதோஷம் மற்றும் அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com