ரெயில் நிற்பதற்கு முன்பாகவே கீழே இறங்கியபோது ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணி

எக்ஸ்பிரஸ் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே பயணி கீழே இறங்க முயன்றபோது விபரீதம் நிகழ்ந்துள்ளது.ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் நிற்பதற்கு முன்பாகவே கீழே இறங்கியபோது ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணி
Published on

திருச்சி:

திருச்சியில் பல்லவன் ரெயில் நிற்பதற்கு முன்பாகவே, கீழே இறங்கியபோது ரெயிலுக்கு அடியில் பயணி சிக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் இணைந்து ரெயிலுக்கு அடியில் சிக்கிய பயணியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கடும் சிரமத்திற்கிடையே ரெயிலுக்கு அடியில் சிக்கியவரை ரெயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com