வேறு சின்னத்தில் வாக்களித்தால் நாட்டு வளர்ச்சிக்கு எந்த பலனும் இல்லை- பாரிவேந்தர்

பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளது.ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை.
வேறு சின்னத்தில் வாக்களித்தால் நாட்டு வளர்ச்சிக்கு எந்த பலனும் இல்லை- பாரிவேந்தர்
Published on

பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளதாக பெரம்பலூர் மக்களவைத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் பாரிவேந்தர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி ஒன்றியம் பூனாம்பாளையம் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட அவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், "பிரதமர் மோடி10 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்து பெருமை தேடித்தந்துள்ளதாக" குறிப்பிட்டார்.

மேலும் அவர், "பெரம்பலூர் எம்பி தொகுதியில் ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி திட்டம் தொடரும், மேலும் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் வழங்கப்படும்.

தத்தமங்கலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது டாக்டர் பாரிவேந்தர், தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறுப்பத்தூர் ஏரி சீரமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தளு தாளப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, தாமரை சின்னத்தை தவிர, வேறு சின்னத்தில் வாக்களித்தால் நாட்டு வளர்ச்சிக்கு எந்த பலனும் இல்லை" என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com