ரூ.16 கோடி நிதி உதவியுடன் பனை மேம்பாட்டு கழகம்: அமைச்சர் மரிய வில்சன்

பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
₹16 crore aid to support palm farmers - Minister Marie Wilson
Tamil Nadu Budget Palm Development Boost: New corporation with ₹16 crore aid to support palm farmers
Published on

தமிழக நிதி நிலை அறிக்கை 2026

2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.

பனை மேம்பாட்டு கழகம்

இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், ரூ.16 கோடி நிதி உதவியுடன் பனை மேம்பாட்டு கழகம் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பதநீர், பனங்கருப்பட்டி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பனை பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பனை விவசாயிகளின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆடை உற்பத்தி

மேலும் ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர்-க்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com