கடைக்கோடி மக்களுக்காகவே கழக ஆட்சியை தந்தவர் நம் தங்கத்தலைவர்- ஜெயக்குமார் டூவிட்

பொன்மனச் செம்மல் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி கண்ட தமிழினத்தின் திருநாள்!மண்ணிலும் மக்கள் மனதிலும்‌ மாற்றமுடியாத இயக்கமாக இருக்கும்,
கடைக்கோடி மக்களுக்காகவே கழக ஆட்சியை தந்தவர் நம் தங்கத்தலைவர்- ஜெயக்குமார் டூவிட்
Published on

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

ஏழைகளின் ஏற்றமே நாட்டின் முன்னேற்றம் எனக் கருதி ஏழை எளியோரின் வலியுணர்ந்து வாரி தந்த வள்ளல்!

தமிழ்நாட்டை சுயநலத்திற்காக சூறையாட நினைத்த சதிகார கும்பலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி கோட்டையில் கழக கொடியை பறக்க விட்ட பொன்னாள்!

பொன்மனச் செம்மல் முதலமைச்சராக பொறுப்பேற்று பொற்கால ஆட்சி கண்ட தமிழினத்தின் திருநாள்!

30.06.1977-ல் முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்று 11-ஆண்டுகள் கடைக்கோடி மக்களுக்காகவே கழக ஆட்சியை தந்தவர் நம் தங்கத்தலைவர்!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வார்த்தை வரிகளுக்கு ஏற்ப நூறாண்டு தாண்டி நூற்றாண்டு கண்டாலும் மண்ணிலும் மக்கள் மனதிலும் மாற்றமுடியாத இயக்கமாக இருக்கும்! இயங்கும்! என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com