

நீலகிரி மாவட்டத்திற்கும், கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கும் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதை தவிர்த்து, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரியில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜூன் 8ம் தேதி அன்று தென்காசி, கோவை, நெல்லை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 9ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், குமரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜூன் 10ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.