தற்கொலை செய்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்: என்.ஆர்.தனபாலன் வேண்டுகோள்

கபடி வீரர் அருணாச்சலம், குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். கபடி வீரர் அருணாச்சலம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தற்கொலை செய்த கபடி வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்: என்.ஆர்.தனபாலன் வேண்டுகோள்
Published on

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் குரும்பலாபேரியை சேர்ந்த கபடி வீரர் அருணாச்சலம், குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அவரது குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

கபடி வீரர் அருணாச்சலம் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com