ரூ.4181 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித்திட்ட விரிவாக்கப் பணிகள்: முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
ரூ.4181 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித்திட்ட விரிவாக்கப் பணிகள்: முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
Published on

சென்னை:

ரூ.4,181 கோடி மதிப்பீட்டில், வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகள் தொடக்க விழா மின்ட் தங்க சாலை பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.

பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று தொடங்கி வைக்கிறார்.

இதில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சி.எம்.டி.ஏ., பள்ளிக் கல்வித்துறை, சுகாதாரத்துறை, மீன் வளத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

சென்னை நகரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் விக்டோரியா ஹால் புதுப்பிப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்பட முடிவுற்ற எண்ணற்ற பணிகளையும் திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com