

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்தசில நாட்களாக மின்தடை அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் சாலைகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டுக்கு தவெக அரசு பல்வேறு காரணங்களை கூறிவரும் நிலையில், தற்போது அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர் மின்வெட்டை கண்டித்து அதிமுக விழுப்புரத்தில் போராட்டம் அறிவித்துள்ளது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்.,
“மின்வெட்டு இபிஎஸ் ஆட்சிக்காலத்திலும் நிகழ்ந்துள்ளது. வெயில் காரணத்தினால் மின்தேவை அதிகம் இருக்கிறது. மக்கள் அதிகம் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். அதிமுக ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி மின்சாரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் மின்சாரத்தை பயன்படுத்த அதற்கான கட்டுமானங்கள் வேண்டும். திமுக ஆட்சியில் மின்சார பகிர்மானத்திற்கான வேலைகளை செய்யவே இல்லை. 5 ஆண்டுகளில் திமுக செய்துள்ள செலவு ரூ.627 கோடி மட்டும்தான். சென்னையில் 3500 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்துவதற்காக கட்டுமானங்களே இருக்கிறது. ஆனால் அங்கு மக்கள் 5000 மெகாவாட் பயன்படுத்துகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.