டாஸ்மாக்கை தனியார் மயமாக்கும் நோக்கம் இல்லை- அமைச்சர் விக்னேஷ்

மாதத்திற்கு சுமார் ரூ.7000- ரூ.8000 கோடிக்கு மேல நஷ்டம் இருக்கு.
டாஸ்மாக்கை தனியார் மயமாக்கும் நோக்கம் இல்லை- அமைச்சர் விக்னேஷ்
Published on

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

டாஸ்மாக்கை தனியார் மயமாக்கும் நோக்கம் இல்லை.

கடந்த ஆட்சிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக கூறியது எல்லாம் பொய். அப்படி மூடியது என்றால், வருமானம் ஈட்டாத டாஸ்மாக் கடைகளும், பாருடன் இயங்காத கடைகளும்தான்.

உண்மையில் நாங்கள் இன்று மூடிய 717 கடைகளில் ஒரு நாள் வியாபாரம் ரூ.25 லட்சம் வரை உள்ளது. குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் வரை உள்ளது.

இதனால், மாதத்திற்கு சுமார் 7000-8000 கோடிக்கு மேல நஷ்டம் இருக்கு. இது மற்ற துறைகளில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கு பிறகு மற்ற டாஸ்மாகள் கடைகள் மீதும் நடவடிக்கை இருக்கும்.

நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். இனி அவர்கள் பயந்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் என்னென்ன வெளியே எடுக்க போகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது.

நாங்கள் வந்து 20 நாட்கள் தான் ஆகிறது என்பதால் பொறுமையாக செயல்பட்டோம். ஆனால், இவர்கள் பேச பேச அவர்கள் திருடியதை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து சொல்வோம். அதனால் அவர்கள் அமைதியாக இருப்பது அவர்களுக்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com