பிளாஸ்டிக் கவர்களில் உணவு அடைத்து விற்க தடை இல்லை- உயர்நீதிமன்றம்

2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு.தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
பிளாஸ்டிக் கவர்களில் உணவு அடைத்து விற்க தடை இல்லை- உயர்நீதிமன்றம்
Published on

பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

14 பொருட்களுக்கு தடை விதித்து 2018ல் உத்தரவிட்ட நிலையில், உணவுப் பொருட்களை அடைக்கும் கவர்களுக்கு 2020ல் தடை விதித்ததையும் எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

2020ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது.

அதில், " பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை" என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "அன்றாட உணவுப் பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களை தடை செய்யும் அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், அதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக" அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com