நீட்டுக்கு எதிரான போராட்டம்: மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து- அமைச்சர் ராஜ்மோகன்

ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
Minister Rajmohan
NEET Protest Cases Dropped: All Student FIRs to be Withdrawn in Tamil Nadu
Published on

தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் குளறுபடிக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தமிழகத்திலும் மாணவர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது.

முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படியும், ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை அடுத்து, டெல்லி ஜந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

நீட் தேர்விற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குகள் தொடரப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது.

இந்தநிலையில் தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய்-யின் உத்தரவின் பேரில், பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com