நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை

Minister Rajmohan respect nadigar thilagam sivaji ganesan
Published on

அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நடிப்பு ஆளுமையான திகழ்ந்த அவர், 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி அன்று காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மணிமண்டபம்

நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையுடன் தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த நினைவகத்தில அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. அவரது நினைவு நாளன்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த மணிமண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-வது ஆண்டு நினைவு நாளான இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அடையாறில் உள்ள நினைவு மண்டபத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சிவாஜி குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com