மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து வீடுகள் சேதம்

பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து வீடுகள் சேதம்
Published on

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள பழைய குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று இரவு மர்ம பொருள் வெடித்து அப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. சத்தத்தின் அதிர்வால் அங்குள்ள காவலர் குடியிருப்பு பகுதி வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

மர்ம பொருள் வெடித்த இடத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டடு இருந்தது., இதனால் இதிலிருந்து பெட்ரோல் லீக்காகி தீப்பற்றி எரிந்து பேட்டரிகள் வெடித்ததா? சமூக விரோதிகள் தீவைத்து சென்றனரா? அல்லது ஏதேனும் வெடி பொருள் பதுக்கி வைக்கப்பட்டு வெடித்ததா? என செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்பிரனீத் உத்தரவின் பெயரில் பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களது தடயவியல் ஆய்வின் போது ஏதேனும் வெடிகுண்டு தொடர்புடைய பகுதிகளோ, அதற்கான ரசாயனங்களோ இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து புலன் விசாரணை மேற்கொள்வார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தின் அருகிலேயே இந்த மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com