மர்ம பொருள் வெடித்து பசுமாடு வாய் கிழிந்தது

பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.
மர்ம பொருள் வெடித்து பசுமாடு வாய் கிழிந்தது
Published on

திட்டக்குடி:

திட்டக்குடி அருகே மர்ம பொருள் வெடித்து பசுமாடு வாய் கிழிந்தது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜானகி (வயது55). இவரது 3 பசுமாடுகள் நேற்று மாலை அருகிலுள்ள ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்தபோது. அப்பகுதியில் கிடந்த மர்மபொருள் ஒன்றினை மாடுகள் கவ்வியபோது அந்த மர்ம பொருள் வெடித்தது.

இதில் ஒரு பசுமாட்டின் வாய் கிழிந்தது. வெடிச்சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி கிராம பொதுமக்கள் பசு மாடு வாய் கிழிந்த நிலையில் ரத்தம் சொட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பசு மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காட்டுப்பன்றிகள், மான் போன்ற வனவிலங்குகளை சமூகவிரோதிகள் சிலர் இதுபோல வெடி வைத்து வேட்டையாடுவதாக அப்பகுதிபொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அது வெடித்ததில் பசு மாடு வாய் கிழிந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மர்ம பொருளை வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com