திருச்செந்தூர் கோவிலில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள்: அலைமோதிய மக்கள் கூட்டம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது.அதிகாலை முதல் கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கோவிலில் இன்று திருமணம் செய்து கொண்ட ஒரு புதுமண ஜோடி - கோவில் வாசலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் கோவிலில் இன்று திருமணம் செய்து கொண்ட ஒரு புதுமண ஜோடி - கோவில் வாசலில் குவிந்த பக்தர்கள்
Published on
<p>கடற்கரையில் அலைமோதிய கூட்டம்</p>

திருச்செந்தூர்:

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்கள் தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம், மேலும் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறுகிறது. இன்று ஆவணி மாத முதல் சுப முகூர்த்த தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருமண ஜோடிகள், பக்தர்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.

இன்று 100-க்கும் மேற்பட்ட திருமணங்களும் கோவிலில் நடைபெற்றது. அதிகாலை முதல் கோவிலில் குவிந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com