சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.ஜனவரி 3-ம் தேதி மாலை சென்னை புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 3-ம் தேதி தொடக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
Published on

சென்னை:

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தகக் காட்சியானது வரும் ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனவரி 3-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

புத்தகக் காட்சியானது தினமும் வேலை நாளில் காலை 11 மணி முதலும், விடுமுறை நாளில் காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

தமிழக அரசின் பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com