முரசொலி செல்வம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் இன்று உயிரிழந்தார்.முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
முரசொலி செல்வம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.

முரசொலி செல்வம் உடலுக்கு அழுதுகொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் செலுத்தும் புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், "கொள்கை முரசொலிக்கும் உங்கள் எழுத்துகளை நிறுத்திக் கொண்டீர்களே!" என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com