"உங்கள் சாதனையால் தமிழகம் பெருமைக் கொள்கிறது"- பிரக்ஞானந்தாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.
"உங்கள் சாதனையால் தமிழகம் பெருமைக் கொள்கிறது"- பிரக்ஞானந்தாவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
Published on

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா முன்னேற்றம் அடைந்துள்ளார். அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார்.

அரையிறுதியில் 2 போட்டிகள் சமனான நிலையில் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதில், நம்பர் ஒன் வீரர் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோத உள்ளார்.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவிற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் சாதனையால் தமிழகம் பெருமைக் கொள்கிறது. இறுதிப்போட்டியில் வெற்றியடைய வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com