நடிகர் அமீர்கானை பாராட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோர் உடனடியாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
நடிகர் அமீர்கானை பாராட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
Published on

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்களுக்கு உள்ள பிரச்னைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கலாம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தான் வசிக்கும் இடத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோர் உடனடியாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.

பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமீர் கானை பாராட்டி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை பாராட்டியதற்கு நன்றி விஷ்ணு விஷால். சிறந்த மனிதனாக திகழ்வதற்கு உங்கள் அருகே இருக்கும் நபருக்கும் நன்றி. மீட்பு உதவி பெறுவதற்கு அவர் எந்த வகையிலும் தன்னுடைய புகழை அவர் பயன்படுத்தாதது என்னை பிரமிக்க வைத்தது.

தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தேவையான விஷயத்தை சாதிக்க நினைப்பவர்களுக்கு பாடமாக உள்ளார். புயலின் தீவிரத்தை உணர்ந்து பொறுமையாக மீட்பு உதவிகள் வரும் வரை காத்திருக்கும் நடிகர் அமீர்கான் போன்றவர்களுக்கு நன்றி. மீட்புப் பணிகள் திட்டமிட்டபடி தொடரும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com