அமைச்சர் செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றம்: வருவாய்-பேரிடர் நிர்வாகத்துறை ஒதுக்கீடு

நிதி அமைச்சகம் புதிதாக அமைச்சராகி உள்ள ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றம்: வருவாய்-பேரிடர் நிர்வாகத்துறை ஒதுக்கீடு
Published on

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 23 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்கள் இலாகாக்களும் ஒதுக்கப்பட்டன.

இதில் அமைச்சர் செங்கோட்டையனின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த செங்கோட்டையன் வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

செங்கோட்டையன் வகித்து வந்த நிதி அமைச்சகம் புதிதாக அமைச்சராகி உள்ள ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. மரிய வில்சனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com