சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் குழந்தைகள் கெட்டுப்போய் விடுவார்களா?- அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் எனக் கூறும் முதல் நபராக அவரை பார்க்கிறேன். பள்ளிகளில் படிக்கும் 90 சதவீத குழந்தைகள் சிக்கன் சாப்பிடுகின்றனர்.
அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்
Published on

கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சியாளர்கள் சார்ந்த, அரசியல் சார்ந்த புத்தகங்களே நூலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளன. இனி அவ்வாறு இல்லாமல் அரசியல் சாராத அனைத்து புத்தகங்களும் வாங்கப்படும்.

ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோட்டில் பள்ளிகளில் ஆய்வு செய்தேன். சில பள்ளிகளில் மைதானம், கழிப்பிடம், காற்றோட்டம், விசாலமான வகுப்பறை கூட இல்லாமல் கடந்த ஆட்சியாளர்கள் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை . இவற்றை ஆய்வு செய்து சீரமைக்க முதலமைச்சர் கூறியுள்ளார் .

விரைவில் அறிவிப்பு

நான் அறிந்தவரை 50 சதவீத பள்ளிகளில் பி.டி. ஆசிரியர்கள் இல்லை. 250 குழந்தைகள் ஒரு பி.டி.ஆசிரியர் தேவை என்ற நிலையில் ஆயிரம் குழந்தைகள் உள்ள பள்ளிகளில் ஒரு பி.டி. ஆசிரியர் கூட இல்லாததை பார்த்தேன். நூலகர்களும் இல்லை. இவ்விரு பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளிவரும்.

கடந்த ஆட்சி காலங்களில் ஆட்சியாளர்கள் சார்ந்த, அரசியல் சார்ந்த புத்தகங்களே நூலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளன. இனி அவ்வாறு இல்லாமல் அரசியல் சாராத அனைத்து புத்தகங்களும் வாங்கப்படும். அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் சிக்கன் பிரியாணி குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் தெரிவித்து அதற்கான ஆய்வு நடந்து வருகிறது.

அதற்குள் முன்னாள் எம்.பி., .டி .கே .எஸ் .இளங்கோவன், பள்ளிகளில் சிக்கன் பிரியாணி வழங்கினால் அங்குள்ள சைவம் சாப்பிடும் குழந்தைகள் என்ன ஆவார்கள் என கேள்வி எழுப்புகிறார். சிக்கன் பிரியாணி சாப்பிட்டு குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் எனக் கூறும் முதல் நபராக அவரை பார்க்கிறேன். பள்ளிகளில் படிக்கும் 90 சதவீத குழந்தைகள் சிக்கன் சாப்பிடுகின்றனர்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ஒரு குழந்தை கெட்டுப் போய் விடுவார்களா என்ன?. அதை உணவாக பார்க்காமல், ஒரு உயிர் பொருளாக, புரோட்டின் உணவாக பார்க்கிறேன். அதில் அரசியலை திணிக்காதீர்கள். விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com