முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் 2 நாள் பெங்களூரு சென்ற நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அமைச்சர் பொன்முடி
Published on

சென்னை:

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று மாலை விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் நேற்று மாலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்று, அமைச்சர் பொன்முடி, எம்.பி. கவுதம சிகாமணி இரவு வீட்டிற்கு புறப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்தார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் 2 நாள் பெங்களூரு சென்ற நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

முதலமைச்சர் பெங்களூருவில் இருந்தபோது தொலைபேசியில் அமைச்சர் பொன்முடியுடன் பேசிய நிலையில் தற்போது சந்தித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com