

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
2021-2026 வரையிலான காலக்கட்டத்தில் மாநில சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை முன் எப்போதும் இல்லாத வகையில் உச்சம் அடைந்துள்ளது.
திமுக ஆட்சியில் கடன் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
வரவை விட செலவைக் கட்டுப்படுத்துவதே முக்கியம் என திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், வரவைக் காட்டிலும் செலவே அதிகமாக உள்ளது.
பொதுத்துறை நிறுவன கடனையும் சேர்த்தால் மாநிலத்தின் உண்மையான கடன் 13.18 லட்சம் கோடி ஆகும்.
அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செலவாகிறது என தெரிவித்தார்.