மினிபஸ் டிரைவர் கொலை வழக்கு: அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மினிபஸ் டிரைவர் கொலை வழக்கு: அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவமணிகண்டன் (வயது 28).

இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குறித்து அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி இரவு புகார் அளித்தார். இந்நிலையில் 7-ம் தேதி மாலை 5 மணிக்கு அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சிவ மணிகண்டன் நடுரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசில் புகார் அளித்ததன் காரணமாக சிவ மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் புகார் அளித்த சமயத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுவன் உள்பட 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவ மணிகண்டன் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் காரணமாக தான் குற்றவாளிகள் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாகவும், புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதியை பணி இடைநீக்கம் செய்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாஉல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com