ரூ. 6000 நிவாரணம்.. டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு

மிச்சாங் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மெல்ல மீள துவங்க இருக்கிறது. புயல் வெள்ளத்திற்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.
ரூ. 6000 நிவாரணம்.. டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு
Published on

மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி சென்னை இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. மிச்சாங் புயல் வெள்ளத்திற்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்த நிலையில், மிச்சாங் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன்கள் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், "புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும். பத்து நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கப்பட்டு விடும்," என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com