மேகதாது அணை விவகாரம்: தீர்மானம் மீது கட்சிகள் விவாதம்

மேகதாது அணை என்பது நமக்கு மட்டுமல்ல கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களை சார்ந்த பிரச்சனை.
Mekadatu dam issue
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது.

மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர்.

அதன்படி, முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிமுன் அன்சாரி: மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சுமூக நிலையை உருவாக்க வேண்டும். தமிழக நலன் சார்ந்த விவகாரத்தில் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும்.

மேகதாது அணை என்பது நமக்கு மட்டுமல்ல கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களை சார்ந்த பிரச்சனை.

மேகதாது குறித்த முதலமைச்சரின் தனித் தீர்மானத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

வன்னி அரசு:

தமிழர் உரிமை காக்கும் அரசின் அனைத்து முடிவுகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும்.

இந்தியாவின் கடைமடைப்பகுதியான தமிழகம் நீரியல் தேவைக்காக மற்ற மாநிலங்களிடம் போராட வேண்டிய சூழல். தமிழக வேளான் நலனுக்காக மட்டுமல்ல கர்நாடக விவசாயிகள் மீது அக்கறையுடன் முதலமைச்சர் கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவு.

முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது. வரவலாற்று சிறப்புமிக்க முதலமைச்சரின் முன்மொழிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் ஒப்புதலின்றி செயல்படக்கூடாது.

ராமச்சந்திரன்:

முதலமைச்சர் முன்மொழிந்த மேகதாது தீர்மானத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு.

மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாலைவனமாக மாறும்.

கர்நாடக காங்கிரஸ் அரசுடன் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடாந்து கொண்டு இணக்கமான சூழல் ஏற்படுத்த வேண்டும்.

5 கோடி மக்களின் குடிநீர் தாம் தீர்க்கிறது ஜீவ நதியான காவிரி நதி. அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் தர வேண்டும்.

கொமதேக எம்எல்ஏ நித்யானந்தம்:

முதலமைச்சர் முன்மொழிந்த மேகதாது தீர்மானத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி ஆதரவு.

கூட்டணி தர்மத்தை விட தமிழ்நாட்டின் தர்மம் முக்கியம் என த.வெ.க. அரசு செயல்பட வேண்டும். கர்நாடக அரசை தடுப்பதற்கு சட்ட நடவடிக்கையே சிறந்தது.

ஜவாஹிருல்லா:

முதலமைச்சரின் தனித் தீர்மானத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசினார்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் தவறான திசையில் செல்கிறது.

கர்நாடக முதல்வர் சுயலாபத்திற்காக உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து அணை கட்ட முயற்சி.

உச்சநீதிமன்ற தீர்ப்பை திசை திருப்பி தவறான முறையில் சாதகமாக பயன்படுத்த கர்நாடக முதல்வர் முயற்சிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com