

கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி சென்னையில் தி.மு.க. சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய மேயர் பிரியா, விஜய் தலைமையிலான ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது,
“இன்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. யாரென்று உங்களுக்கு தெரியும்.
கவர்ச்சியால் இல்லையென்றால் வேறு எதை வைத்து அவர்கள் வெற்றி பெற்றார்கள்? வேறு என்ன களப்பணியை அவர்கள் செய்தார்கள்?
அவர்கள்தான் இப்போது ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது தெரியாமல், இன்னும் எதற்கெடுத்தாலும் திமுகவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சி அமைத்து இத்தனை நாட்கள் ஆகியும் எந்த அமைச்சரும், எம்எல்ஏவும் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை.
கடந்த முறை தலைவர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, கொரோனா காலகட்டத்தில் கூட மருத்துவமனைக்கு நேரில் சென்று பொறுப்புடன், அக்கறையுடன் செயல்பட்டார்.
திமுகவை குறை சொல்வதற்கு நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? எதற்காக அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறீர்கள்?
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. என்றும் மக்களுடன் இருக்கும், மக்களும் திமுகவுடன் இருப்பார்கள்.” என்று தெரிவித்தார்.