வீரன் முத்துக்கோன் 266-வது குரு பூஜை: ஓ.பன்னீர்செல்வம் 11-ந்தேதி மாலை அணிவித்து மரியாதை

மாவீரன் அழகு முத்துக்கோனின் 266-வது குருபூஜையை முன்னிட்டு 11-ந்தேதி எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
வீரன் முத்துக்கோன் 266-வது குரு பூஜை: ஓ.பன்னீர்செல்வம் 11-ந்தேதி மாலை அணிவித்து மரியாதை
Published on

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆங்கிலேய அரசாங்கத்திற்கு வரி தர மறுத்து போர்க்களத்தில் உயிர் நீத்தவரும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டவரும், வாள்வீச்சு, காளை அடக்குதல், மல்யுத்தம் போன்றவற்றில் கைதேர்ந்தவருமான சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோனின் 266-வது குருபூஜையை முன்னிட்டு 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணியளவில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அனைவரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com