தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது! - மாணிக்கம் தாகூர்

ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!
மாணிக்கம் தாகூர்
Published on

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் அர்லேக்கர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இந்த விழாவில், முதலில், வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று, ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாகவும், அதன்படியே பட்டமளிப்பு விழா நடைபெறும் என்றும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதை தராமல் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு தொடர்கிறது!

மனுநீதி சோழன் மண்ணில் தமிழ் மரபை மீறும் ஆளுநருக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. விழாவைப் புறக்கணித்து அமைச்சர் விஸ்வநாதன், ராபர்ட் புரூஸ் எம்பி சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர். ஆளுநர் தனது அவமரியாதையான நடைமுறையை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com