மெத்தையில் தூங்கியதால் தகராறு: தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்

பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மெத்தையில் தூங்கியதால் தகராறு: தம்பியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்
Published on

சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது38), கூலி தொழிலாளியான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அண்ணன் விஜய சாரதியுடன் மதுகுடித்ததார்.

அதன்பின்னர் சாலையோரத்தில் இருந்த விஜய சாரதியின் மெத்தையில் சிவக்குமார் படுத்து தூங்கினார்.

இதனை கண்டு ஆத்திரம் அடைந்த மதுபோதையில் இருந்த விஜயசாரதி இரும்பு கம்பியால் தூங்கி கொண்டிருந்த தம்பி சிவக்குமாரை சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய சாரதியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com