தாய் மகன் உறவு குறித்து கொச்சையாக பேசிய மகாவிஷ்ணு - சர்ச்சை வீடியோ

மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.திருப்புகழ் தந்த அருணகிரிநாதரைப் பற்றி தரக்குறைவாக மகாவிஷ்ணு பேசியுள்ளார்.
mahavishnu
Published on

சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், தாய் மகன் இடையிலான புனித உறவை மிக கொச்சையாக வர்ணித்து, காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் ஆபாசமாக சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணுவின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அதே வீடியோவில் முருக பக்தர்களையும் மகாவிஷ்ணு கொந்தளிக்கச் செய்திருக்கிறார்.

முருக பக்தர்களை பொறுத்தவரை திருப்புகழ் என்பது வழிபாட்டு மற்றும் வாழ்க்கை முறை நூல். அப்படிப்பட்ட திருப்புகழ் தந்த அருணகிரிநாதரைப் பற்றி தரக்குறைவாக மகாவிஷ்ணு பேசியிருப்பது ஆன்மிக வட்டாரத்தில் உச்சக்கட்ட கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com