

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க. ஆட்சியில் முந்தைய தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதியளித்தார்.
அதன்படி அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000, தமிழ் புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.1000 அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையான 1000 ரூபாய் 1.31 கோடி பெண்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு 2-வது முறையாக மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.