கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மனோஜ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை

கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மனோஜ் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று விசாரணை
Published on

கோவை:

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த விசாரணையின் போது அவர் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

இதற்காக அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது.

இதையடுத்து இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மனோஜ் சாமி விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார், கொள்ளை சம்பவத்தின் போது அங்கு நடந்தது என்ன? யார் உங்களை அங்கு அழைத்து சென்றது? யாருக்காக கொள்ளையடிக்க சென்றீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com