கொடநாடு வழக்கு: கனகராஜின் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீசில் ஆஜர்

சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 300-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.விசாரணையில் எழுந்த சந்தேகங்கள் காரணமாக சிலருக்கு சமன் அனுப்பப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
கொடநாடு வழக்கு: கனகராஜின் உறவினர் சி.பி.சி.ஐ.டி போலீசில் ஆஜர்
Published on

கோவை:

நீலகிரி மாவட்டம் கொட நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

இதுதொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமினில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை 300-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் இறந்த கனகராஜின் உறவினரான ரமேஷ் என்பவருக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து ரமேஷ் இன்று காலை கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கூறும்போது, இந்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. விசாரணையில் எழுந்த சில சந்தேகங்கள் காரணமாக சிலருக்கு சமன் அனுப்பப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com