கரூர் பரமத்தி, ஈரோட்டில் இன்று 110 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு

இந்தியாவிலேயே இன்று அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியில் 114.8 டிகிரி வெயில் கொளுத்தியுள்ளதுதமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும்
கரூர் பரமத்தி, ஈரோட்டில் இன்று 110 டிகிரி வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு
Published on

தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோட்டில் 110 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்தியாவிலேயே இன்று அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியில் 114.8 டிகிரி வெயில் கொளுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

திருச்சி - 109, வேலூர் - 109, மதுரை விமான நிலையம் - 108, திருத்தணி - 107, திருப்பத்தூர் - 107, பாளையங்கோட்டை - 106, மதுரை நகரம் - 105, சேலம் - 105, தருமபுரி - 104, தஞ்சாவூர் - 104, மீனம்பாக்கம் - 102, கோவை - 102, நாகப்பட்டினம் - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com