கருணாநிதி நினைவு நாள்- மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது.பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.
கருணாநிதி நினைவு நாள்- மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
Published on

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றுள்ளனர்.

ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளது. அமைதி பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் அமைதி பேரணியாக சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com