

சென்னையில் பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அவருடைய கொள்கைகள் பாராட்டுக்குரியது. புதிய அரசியலை தொடங்க புதிய அமைப்பை தொடங்கியிருக்கிறார். லட்சக்கணக்கான இளைஞர்கள் தானாக முன்வந்து இணைகிறார்கள். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக அண்ணாமலை இருக்கிறார். எனவே அவரது அமைப்புக்கு அணில் போன்று இருந்து உதவுவோம். அவருடன் இணைந்து செயல்படுவோம் அவருக்கு உற்சாக வரவேற்பை அளிப்போம்.
மக்கள் விரும்பும் தலைமையை அவர் கொடுப்பார். அறிவுசார்ந்த தலைமை அண்ணாமலையிடம் தான் இருக்கிறது. எனவே தான் நாங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்ப இருக்கிறோம்.
விஜய்யை எதிர்த்து அரசியல் இருக்காது. விஜய் ஆட்சியில் குற்றங்கள் இருந்தால் அதை எதிர்த்து ஜனநாயக கடமையாற்றுவார். சாமானிய அரசியல்வாதியாக அண்ணாமலை செயல்படுவார். மக்கள் விரும்பும் தலைவராக அவர் வருவார். குக்கிராமம் வரை பா.ஜ.க. கொண்டு சென்றவர் அண்ணாமலை. இதை யாரும் மறுக்க முடியாது. நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.