அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்- தமிழக அரசு

அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்- தமிழக அரசு
Published on

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com