முறைகேடு புகார்: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேடு புகார்: திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் வடக்கு மாவட்ட முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார். இவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதானதையடுத்து தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது கட்சியின் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் ராஜ்மோகன்குமார் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com