வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்கும் திமுக வேட்பாளர்கள் நேர்காணல்

தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிப்பு.
வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்கும் திமுக வேட்பாளர்கள் நேர்காணல்
Published on

திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 10ம் தேதி முதல் தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்துள்ளவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் செய்ய உள்ளா்.

அதன்படி, மார்ச் 10ம் தேதி காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், நேர்காணலின்போது, தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.

நேர்காணலில், அந்தந்த நாடாளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும், பரிந்துரையாளர்கள், ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com