உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது. கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் வெல்கம் ஓட்டலில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி 7,8 -ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் செங்கல்பட்டு தொழில் முதலீடுகள் மாநாட்டின் முன்னோடியாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் துணை தலைவர் ராமு ஜிஜேந்திரன் (ஜி ஜி), தனது தொழில் முதலீட்டாளர் ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்து கொண்டார். நிகழ்ச்சியில் எம். எல். ஏ.க்கள்

வரலட்சுமி மதுசூதனன், மு.பாபு, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங் மற்றும் காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், உதவி இயக்குனர் கார்த்திக், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், மாவட்ட பிரதிநிதி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com