வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த இந்திய விமானப்படை வீரர்

கடும் வெயிலின் தாக்கம் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார்.மயங்கியவரின் இடத்தில் உடனடியாக வந்து நின்ற மற்றொரு வீரர்.
airforce
Published on

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அப்போது கடும் வெயிலின் தாக்கம் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்த சக வீரர்கள் மயங்கி விழுந்த விமானப்படை வீரரை தூக்கி சென்ற முதலுதவி அளித்தனர்.

மயங்கி விழுந்தவரின் இடத்தில உடனடியாக மற்றொரு வீரர் வந்து நின்றதால் அணிவகுப்பு தடைபடாமல் நடைபெற்றது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com