ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம் பெற்றுள்ளன. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்.
ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
Published on

சென்னை:

போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பின்பு டிசம்பர் 6-ந்தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com