ஆசிரியை கொலையால் அதிர்ச்சி அடைந்தேன் - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். குற்றவாளிக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
ஆசிரியை கொலையால் அதிர்ச்சி அடைந்தேன் - காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
Published on

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்திருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றது. குற்றவாளிக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில், சட்டம் ஒழுங்கு குறித்து அச்சம் எழ வாய்ப்பாக அமைந்து விடும் என்று முதலில் பதிவிடப்பட்டிருந்தது. பின்னர் அந்த வரிகள் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com